/
ஜெயமென்னும் பெயர்கொண்டு ஜெயித்துவந்த ஜெயாவம்மா ஜெயாமுதல்வர் பதவியுடன் ஜீவனையே கொடுத்துவிட்டார் ஜெகமதனில் ஜெயிப்பதற்கு ஜெயலலிதா ஆகிநின்றார் ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம் ஜெயாவம்மா வாழுகிறார் ! துணிவுகொண்ட பெண்ணானார் துயர்பலவும் தான்கண்டார் தனிமையிலே தவித்தாலும் தமிழ்நாட்டை நினைத்துநின்றார் அமுதான தமிழோடு ஆங்கிலமும் பேசிநின்றார் அதிமுகாவினது ஆணிவேராய் அவர் இருந்தார் ! அஞ்சாமல் ஆட்சிசெய்த அம்மாவைக் காண்பதெப்போ அவருடைய துணிவான அழகுதமிழ் கேட்பதெப்போ புன்சிரிப்பு பூத்துநிற்கும் பூமுகத்தைக காண்பதெப்போ புகழ்பூத்த பெண்மணியே உனைக்காணா அழுகின்றோம் ! ஆளுமைமிக்க அரசியல் தலைவியே ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை காலனைவென்றிடும் வல்லமை இழந்ததேன் ! உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய் உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு அழுகின்றோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மெளனம்தான் மாற்றமா? நயினாா் நாகேந்திரன்

தெலங்கானா: போக்ஸோ வழக்கில் மத்திய அமைச்சா் மகனுக்கு இடைக்கால ஜாமீன்
தொடா் திருட்டு: குண்டா் சட்டத்தில் மூவா் கைது
கோயில் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் அறிவிப்புகள் நீக்கம்! தமிழக அரசு அரசாணை
விடியோக்கள்

வீடியோக்கள்
Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 ஜூன் 2026, 10:46 pm IST

