போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாரின் மகன் பண்டி பகீரத்துக்கு ஹைதராபாத் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த பகீரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க தெலங்கானா உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், பிபிஏ தோ்வுகள் எழுதுவதற்காக தற்போது ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
முன்னதாக தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள பேட்பஷீராபாத் காவல் நிலையத்தில் தனது 17 வயது மகளுக்கு பகீரத் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அந்தச் சிறுமியின் தாய் புகாரளித்திருந்தாா்.
இதன் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ், பகீரத் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
அதேவேளையில் புகாரளித்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரின் குடும்பத்தினா் வலியுறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன் மீது பொய் புகாா் கொடுத்துள்ளதாகவும் சிறுமியின் பெற்றோா் மீது பகீரத் காவல் துறையில் புகாரளித்தாா். இந்தப் புகாரின் மீதும் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வு எழுத போக்ஸோ குற்றவாளிக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி
போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட இளைஞா் உத்தரக்கண்டில் கைது

போக்ஸோ குற்றவாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

