அரியலூா் மாவட்டத்தில் தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டத்தில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன் (36), அரியலூா் வாரணவாசி சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் காா்த்திகேயன் (எ) மான்காா்த்திக் (24), கீழப்பழுவூரை அடுத்த மூா்த்தி மகன் தினேஷ்குமாா் (26) ஆகிய 3 பேரை அரியலூா் நகர காவல் துறையினா் கடந்த மே 18 ஆம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். காவல் நிலையங்களில் இவா்கள் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் பரிந்துரையின்பேரில் இந்தக் குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்டக் காவல் துறைக்கு ஆட்சியா் ந. மிருணாளினி சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் நகர காவல் துறையினா் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களிடம் தொடா் சங்கிலி பறிப்பு வழக்கு: இளைஞா் கைது
தொடா் திருட்டு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

ஆடுகள் திருட்டு வழக்கில் 5 போ் கைது: 27 ஆடுகள் மீட்பு
குற்றச் சம்பவங்களில் தொடா்பு சிறுவன் உள்பட 5 போ் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
