மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹெல்மெட்டை சுத்தம் செய்வது இனி எளிது! தானியங்கி இயந்திரம் அறிமுகம்!

வெப்ப ஆக்சிஜன் செலுத்தி 5 நிமிடங்களில் முழுமையா சுத்தம்; ரூ. 49 கட்டணம்.

Helmify is building automated helmet cleaning station

தலைக்கவசத்தை சுத்தப்படுத்தும் இயந்திரம் - படம் / நன்றி - helmify

Published On :28 அக்டோபர் 2026, 5:58 pm IST

இருசக்கர வாகன ஓட்டிகளின் தலைக்கவசத்தை (ஹெல்மெட்) சுத்தம் செய்யும் வகையில் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த இயந்திரத்தின் மூலம், எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாமல் வெறும் 4 நிமிடங்களில் தலைக்கவசம் சுத்தம் செய்யப்படுகிறது.

மைசூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெல்மிஃபை என்ற புத்தாக்க நிறுவனம், இருசக்கர வாகன ஓட்டிகளின் தலைக்கவசத்தை தூய்மையாக்கும் வகையில் புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரத்துக்கு ஹெல்மிஃபை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யப்படுவது எப்படி?

இந்த இயந்திரத்தில் நான்கு முறைகளைப் பயன்படுத்தி தலைக்கவசம் சுத்தம் செய்யப்படுகிறது. முதலில் யுவி முறையில் கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இரண்டாவது, ஓசோன் ஆக்சிஜனேஷன் மூலம் கிருமிகள் நீக்கப்படுகின்றன. அதாவது மிதமான வெப்பத்தில் ஆக்சிஜன் வாயு செலுத்தி சுத்தம் செய்யப்படும்.

மூன்றாவது, அதீத வெப்பத்தில் நீராவி செலுத்தி சுத்தம் செய்யப்படும்.

நான்காவது, வெப்ப உலர்தல் முறையில் விரைவில் ஈரப்பதம் வெளியேற்றப்படும். இந்த நான்கு முறைகளைப் பயன்படுத்தி தலைக்கவசம் சுத்தம் செய்யப்படுகிறது.

5 நிமிடங்களில் இந்த நான்கு முறைகளையும் பயன்படுத்தி சுத்தம் செய்வதற்கு ரூ.49 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 நிமிடங்களில் (ஆழ்ந்த சுத்தம் - டீப் கிளீன்) சுத்தம் செய்வதற்கு ரூ. 79 கட்டணம்.

அட்வான்ஸ் கிளினிங் செய்ய 6 நிமிடங்கள் தேவைப்படும். இதற்கு ரூ. 99 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பெட்ரோல் நிலையங்கள், இருசக்கர வாகன சர்வீஸ் சென்டர்கள், வணிக வளாகங்களில் இந்த இயந்திரத்தைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

Summary

Cleaning helmet is now easy Helmify is building automated helmet cleaning station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.