மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐபோன் விலையில் இன்ஃபினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ! கேம் பிரியர்களுக்கான அம்சங்கள்!

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தில் புதிதாக ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகியுள்ளது குறித்து...

Infinix GT 50 Pro smart phone

இன்ஃபினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ - படம் / நன்றி - இன்ஃபினிக்ஸ்

Published On :27 அக்டோபர் 2026, 6:25 pm IST

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தில் புதிதாக ஜிடி 50 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் இன்று (அக். 27) அறிமுகமாகியுள்ளது. கேம் பிரியர்களைக் கவரும் வகையிலான சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக். 30 முதல் விற்பனை தொடங்கவுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபினிக்ஸ் நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்த நிலையில், பிரீமியம் பயனர்களைக் கவரும் வகையில் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன் 16-க்கு நிகராக, இதன் விலை ரூ. 69,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் உள்ளதா? என்பது குறித்துப் பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

  • 6.78 அங்குல அமோலிட் திரை உடையது.

  • 1.5K (1,208×2,644) பிக்ஸல் தரம் கொண்டது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன்.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4,500 நிட்ஸ் திறன் கொண்டது.

  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 2, கண்களை பாதிக்காத வகையில் லோ ப்ளூ லைட் தரத்துடன் அறிமுகம்.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட் புராசஸர் உடையது.

  • ஆன்டிராய்டு 16 இயங்குதளம் கொண்டது.

  • 12 GB உள்நினைவகம், 256 GB நினைவகம் உடையது.

  • பிரசர் சென்சிடிவ் ஷோல்டர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 வகையான அழுத்த நிலைகளைக் கொடுத்து பட்டனை இயக்க முடியும். இதனால் விளையாட்டில் உள்ள பல்வேறு செயல்பாடுகளுக்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • 6,500mAh பேட்டரி திறன்; வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் கொண்டது. 10W ரிவர்ஸ் சார்ஜிங் செய்துகொள்ளலாம்.

  • இதன் எடை 198 கிராம். இதனால் கைகளில் வைத்துக்கொண்டு விளையாடுவது சுலபம். நீண்ட நேரம் கையில் வைத்திருந்தாலும், பயனர்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.

Summary

Infinix GT 50 Pro Android 16 gaming smartphone launched in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.