மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ!

மெகா வெளியீடுகளில் முழுமையான சந்தாவைப் பெற்ற அதிவேகப் பங்கு வெளியீடாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மாறியுள்ளது.

 IPOs of 5 companies, including NSE, to launch this week

ஐபிஓ வெளியீடு - ஐபிஓ

Published On :21 அக்டோபர் 2026, 7:50 pm IST

புதுதில்லி: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ரூ. 30,213 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை இன்று தொடங்கிய நிலையில், தொடங்கி 100 நிமிடங்களுக்குள் 100 சதவீத முன்பதிவை எட்டி, நாட்டின் மெகா வெளியீடுகளில் முழுமையான சந்தாவைப் பெற்ற வெளியீடாக மாறியது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-க்களின் ஓர் அலசல் போக்கு இதோ:

1. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் - ரூ. 30,213 கோடி (2026)

ரூ. 30,213 கோடி ஐபிஓ வெளியீட்டின் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-ஆக இது அமைந்துள்ளது. பங்கு வெளியீடு தொடங்கிய 100 நிமிடங்களுக்குள் முழு சந்தாவைப் பெற்றது.

2. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் - ரூ. 27,870 கோடி (2024)

தென்கொரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம், அக்டோபர் 2024ல் அதன் ஐபிஓ மூலம் ரூ. 27,870 கோடி திரட்டியது.

3. தேசிய பங்குச் சந்தை - ரூ. 22,569 கோடி (2026)

இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தை, செப்டம்பர் 2026ல் அதன் ஐபிஓ-வை தொடங்கிய நிலையில், முதல் நாளில் சுமார் 42 சதவீத அளவுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றது.

4. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் - ரூ. 21,000 கோடி (2022)

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம், மே 2022ல் அதன் ஐபிஓ-வை வெளியிட்டது.

5. ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் - ரூ. 18,300 கோடி (2021)

பேடிஎம் என்ற பெயரில் செயல்படும் இந்த டிஜிட்டல் பணம் செலுத்தும் மற்றும் நிதிச் சேவைகள் நிறுவனம், நவம்பர் 2021ல் அதன் ஐபிஓ மூலம் ரூ. 18,300 கோடி திரட்டியது.

6. டாடா கேப்பிட்டல் லிமிடெட் - ரூ. 15,512 கோடி (2025)

வங்கி சாரா நிதி நிறுவனம், அதன் பங்கு வெளியீட்டை அக்டோபர் 2025ல் தொடங்கி முதல் நாளிலேயே 38 சதவீதத்திற்கு அதிகமான விண்ணப்பங்களை பெற்றது.

7. கோல் இந்தியா லிமிடெட் - ரூ. 15,200 கோடி (2010)

மத்திய அரசுக்குச் சொந்தமான நிலக்கரி உற்பத்தியாளரான கோல் இந்தியா லிமிடெட், அக்டோபர் 2010ல் அதன் ஐபிஓ மூலம் சுமார் ரூ. 15,200 கோடி திரட்டியது.

8. எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் - ரூ. 12,500 கோடி (2025)

எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ் ரூ. 12,500 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை ஜூன் 2025ல் வெளியிட்டது.

9. எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட் - ரூ. 11,607 கோடி (2025)

எல்ஜி எலக்ட்ரானிக்ஸின் இந்தியக் கிளை ரூ. 11,607 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை அக்டோபர் 2025ல் வெளியிட்டது.

10. ரிலையன்ஸ் பவர் லிமிடெட் - ரூ. 11,563 கோடி (2008)

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் ஒரு பகுதியாக இருந்த ரிலையன்ஸ் பவர், 2008 ஜனவரியில் அதன் ஐபிஓ மூலம் ரூ. 11,563 கோடி திரட்டியது.

Summary

Jio Platforms Ltd became the fastest among the country's mega issues to achieve full subscription.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.