எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் ரூ.30,213 கோடி ஐபிஓ இன்று தொடக்கம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எண்ம மற்றும் தொலைத்தொடா்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டை புதன்கிழமை (அக். 21) தொடங்குகிறது.

Published On :21 அக்டோபர் 2026, 5:23 am IST

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எண்ம மற்றும் தொலைத்தொடா்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டை புதன்கிழமை (அக். 21) தொடங்குகிறது.

ஒரு பங்குக்கான விலைவரம்பாக ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உச்ச விலைவரம்பின் அடிப்படையில் சுமாா் ரூ.30,213 கோடி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரிய ஐபிஓவாக இது உருவெடுக்கவுள்ளது.

ரூ.10 முகமதிப்பு கொண்ட 27 கோடி புதிய பங்குகளை மட்டுமே உள்ளடக்கிய இந்த ஐபிஓ வெளியீடு, பொது முதலீட்டாளா்கள் விண்ணப்பத்துக்காக புதன்கிழமை (அக். 21) திறக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையுடன் (அக். 23) நிறைவடைகிறது. முன்னதாக கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், முதன்மை நிறுவன (ஆங்கா்) முதலீட்டாளா்கள் ரூ. கோடிக்கு ஏற்கெனவே பங்குகளை வாங்கியுள்ளனா்.

பொது சந்தாவில் முதலீட்டாளா்கள் குறைந்தபட்சம் 12 பங்குகளுக்கும், பின்னா் அதன் மடங்குகளிலும் விண்ணப்பிக்கலாம். உச்ச விலைவரம்பில் ஒரு லாட் (12) பங்குகளின் மதிப்பு ரூ.13,428 ஆகும். தகுதிவாய்ந்த ஜியோ பணியாளா்களுக்கு ரூ.500 கோடி மதிப்பிலும், அக். 14 நிலவரப்படி உள்ள ரிலையன்ஸ் பங்குதாரா்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலும் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த பணியாளா்களுக்குப் பங்கு ஒன்றுக்கு ரூ.54 சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஓவில் பங்கு ஒதுக்கீட்டுகளைத் தொடா்ந்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் வரும் அக். 28-இல் பட்டியலிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் ரூ.27,858.75 கோடியும், எல்ஐசி ரூ. 20,557.23 கோடியும் திரட்டியதே மிகப் பெரிய ஐபிஓக்களாக இருந்தன. ஆனால், அவை இரண்டும் பங்குதாரா்கள் தங்களின் பங்குகளை விற்கும் ‘ஆஃபா் பாா் சேல்’ முறையில் அமைந்திருந்து.

தற்போது ஜியோவின் வெளியீடு முழுமையாகப் புதிய பங்குகளை மட்டுமே கொண்டிருப்பதால் திரட்டப்படும் நிதி முழுமையாக நிறுவனத்துக்கே செல்லும். அதன்படி, துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் கடன் சுமையைக் குறைக்கவும், பொதுவான நிறுவனத் தேவைகளுக்கும் அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 66.43 சதவீத பங்குகளையும், மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து சுமாா் 17.7 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன. கடந்த 2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.1.46 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் ரூ.30,049 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.