தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடல் இருசக்கர பைக் பற்றி...

heromotocorp

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி கார்பன் - heromotocorp

Published On :21 அக்டோபர் 2026, 1:20 pm IST

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மோட்டார் பைக்குகள் தற்போது மூன்று மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ஆக்சிலரேட்டரை பிடிக்காமல் ஒரே வேகத்தில் நீண்ட தூரம் எளிதாக பயணிக்க கூடிய குரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பம், புதிய சஸ்பென்ஷன், வண்ணத் திரையுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் போன்ற நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பைக்கின் சிறப்பம்சங்கள்

  • 163.2 சி.சி. ஆயில் கூல்டு

  • 4 வால்வு என்ஜின்

  • 17.1 பி.எஸ். குதிரைத்திறன்

  • 14.6 நியூட்டன் மீட்டர் டார்க்

  • 49 கிலோ எடை

  • 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்

இந்த மாடல்களின் விலை ரூ. 1.27 லட்சம் முதல் ரூ. 1.41 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை மாடல்

எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி அப்டேட் செய்யப்பட்ட அடிப்படை மாடலில் டெலிஸ்கோபிக் முன்பக்க சஸ்பென்ஷன், எல்.சி.டி. மீட்டர், ஒரு சக்கர ஏ.பி.எஸ். வசதி ஆகியவை உள்ளன. விலை ரூ.1.27 லட்சம். இந்த மாடலின் விற்பனை 2027 ஜனவரியில் தொடங்கவுள்ளது.

புரோ மாடல்

புரோ மாடலில் தங்க நிற யு.எஸ்.டி. முன்பக்க சஸ்பென்ஷன், இரட்டைச் சக்கர ஏ.பி.எஸ்., எலெக்ட்ரானிக் திராட்டில், குரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட், ரெயின், ரோடு என மூன்று ரைடிங் மோட்கள் இடம்பெற்றுள்ளன. விலை ரூ. 1.37 லட்சம்.

கார்பன் மாடல்

விலை உயர்ந்த கார்பன் மாடலில் 4.2 அங்குல வண்ணத் திரையுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர், புளூடூத் வழிகாட்டுதல், ஒளிரும் சுவிட்சுகள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் லீவர் ஆகியவை உள்ளன.

அவசர பிரேக் எச்சரிக்கை மற்றும் பந்தய நேரத்தைக் கணக்கிடும் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. விலை ரூ. 1.41 லட்சம்.

புரோ மற்றும் கார்பன் மாடல்கள் அக்டோபர் 16 முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

Summary

Hero Xtreme 160R 4V with cruise control!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.