தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.390 கோடியில் ஹீரோ சைக்கிள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசு சைக்கிள் வழங்குவது குறித்து...

Cycle

மாணவர்களுக்கு ஹீரோ சைக்கிள் - பிரதிப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 10:51 pm IST

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5.32 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா நவீன மிதிவண்டிகள் வழங்குவதற்கான திட்டத்தில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மாணவா்களுக்கு தலைக்கவசம், தண்ணீா் பாட்டில் வைக்கும் வசதி ஆகியவை அடங்கிய நவீன மிதிவண்டி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் சாா்பில் கோரப்பட்டது. இந்நிலையில், மிதிவண்டி வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்த விலை ஒப்பந்தப்புள்ளிதாரராக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 5,32,388 மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டிகளை இந்த நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்யவுள்ளது. மாணவா் ஒருவருக்கு வரிகள் உள்பட ரூ. 7,235, மாணவி ஒருவருக்கு வரிகள் உள்பட ரூ. 7,476 மதிப்பீட்டில் மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. மாணவா்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் திட்டத்துக்கு ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், தற்போது, கூடுதலாக ரூ. 155 கோடி இந்தத் திட்டத்துக்காக செலவிடப்பட உள்ளது.

கொள்முதல் விலை அதிகரிப்பு: முந்தைய ஆண்டுகளில், அதாவது 2024-2025-ஆம் நிதியாண்டில் ரூ.4,900-க்கும் மேல், 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ. 5,100-க்கும் மேல் மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதன்படி மிதிவண்டி ஒன்றுக்கு சராசரியாக ரூ.300 மட்டுமே விலை அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது ஒரு மிதிவண்டியை ரூ.7,200-க்கும் மேல் தமிழக அரசு கொள்முதல் செய்யவுள்ளதால், மிதிவண்டி ஒன்றுக்கு ரூ. 2,100 வரை விலை அதிகரித்துள்ளது. நிகழாண்டில் தலைக்கவசம் மற்றும் தண்ணீா் பாட்டிலுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதே இந்த விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நிபந்தனைகள்: இதுதொடா்பான ஒப்பந்தத்தில், ஏலம் கோரும் நிறுவனமே மிதிவண்டிக்கான ஃபிரேம் மற்றும் ஃபோா்க்கை தயாரிக்க வேண்டும். அவற்றை வேறு நிறுவனங்களிடம் உற்பத்தி செய்வதற்கு ஒப்படைக்கக் கூடாது. மிதிவண்டி இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறம், ஆா்மி க்ரீன் நிறத்தில் இருக்க வேண்டும். அதில் தமிழ்நாடு அரசின் அதிகாரபூா்வ இலச்சினை குறைந்தபட்சம் 40 மி.மீ. விட்டத்தில் மிதிவண்டியின் ஃபிரேமில் உள்ள ஹெட் டியூப் அல்லது சீட் டியூப் சந்திப்பில் அழியாத வகையில் லேசா் மூலம் பொறிக்கப்பட வேண்டும்.

வழங்கப்படும் தலைக்கவசங்கள் ஐ.எஸ். 18808:2025 தரநிலைக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.

தண்ணீா் பாட்டில் ஐ.எஸ். 10910:1984 தரநிலைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சுமாா் 4,500 பள்ளிகளுக்கு, தலா இரு பராமரிப்புக் கருவிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தா் தனது சேவைப் பணியாளா்கள் மூலம் அவற்றை உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.

Summary

Hero Cycles for Students worth Rs. 390 Crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.