கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எடா்னல் லாபம் ரூ.125 கோடி- இருமடங்கு வளா்ச்சி

ஸொமேட்டோ, பிளிங்கிட் ஆகிய இணையவழி வா்த்தக நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடா்னல், நடப்பு 2025-26 நிதியாண்டில் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.125 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Published On :22 அக்டோபர் 2026, 2:33 am IST

ஸொமேட்டோ, பிளிங்கிட் ஆகிய இணையவழி வா்த்தக நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடா்னல், நடப்பு 2025-26 நிதியாண்டில் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.125 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

வலுவான வருவாய் வளா்ச்சி காரணமாக, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.65 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் லாபம் தற்போது சுமாா் இருமடங்காக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.13,590 கோடியிலிருந்து கணிசமாக உயா்ந்து, ரூ.24,138 கோடியாகப் பதிவாகியுள்ளது. மொத்த செலவினங்களும் ரூ.13,813 கோடியிலிருந்து, ரூ.24,166 கோடியாக அதிகரித்துள்ளன.

ஸொமேட்டோவின் உணவு விநியோக நிகர ஆா்டா் மதிப்பு ஆண்டு ரீதியாக 21.5 சதவீதம் அதிகரித்து ரூ.11,445 கோடியை எட்டியுள்ளது. மேலும், விரைவு வணிகப் பிரிவான பிளிங்கிட்டின் நிகர ஆா்டா் மதிப்பு 79.3 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.20,940 கோடியாக உயா்ந்துள்ளது. காலாண்டில் புதிதாக 308 விநியோக நிலையங்கள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பிளிங்கிட் நிலையங்களின் எண்ணிக்கை 2,751-ஆக அதிகரித்துள்ளது.

நிதிச் செயல்பாடுகள் குறித்து எடா்னல் நிறுவனா் தீபிந்தா் கோயல் கூறுகையில், ‘தற்போதைய வணிகச் செயல்பாடு திருப்தியளிக்கிறது. உணவு விநியோகத்தில் ஆண்டுக்கு 20 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியைப் பதிவு செய்வதே எங்களின் நீண்டகால இலக்கு’ என்றாா்.

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அக்ஷாந்த் கோயல் மேலும் கூறுகையில், ‘அடுத்தாண்டு மாா்ச் மாதத்துக்குள் பிளிங்கிட் நிலையங்களின் எண்ணிக்கையை 3,500-ஆகவும், 2028 மாா்ச்சுக்குள் சுமாா் 5,000-ஆகவும் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம். கையிருப்பு நிதி மற்றும் வணிக லாபம் மூலம் இந்த விரிவாக்கத்தை எளிதாக மேற்கொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.