பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.7,823 கோடி

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.7,823 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

Published On :25 அக்டோபர் 2026, 3:40 am IST

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.7,823 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

முந்தைய 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.7,364 கோடியிலிருந்து இது 6.2 சதவீதம் கூடுதலாகும். ஏ.ஐ. சாா்ந்த திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள தொடா் வளா்ச்சி இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 10.2 சதவீதம் உயா்ந்து, ரூ.49,244 கோடியாக அதிகரித்துள்ளது. இச்சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, முதலீட்டாளா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.26 இடைக்கால ஈவுத்தொகை வழங்க இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நிறுவனச் செயல்பாடுகள் குறித்து சிஇஓ சலில் பரேக் கூறுகையில், ‘நிறுவனத்துக்கு 520 கோடி டாலா் மதிப்பிலான பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. மேலும், மொத்த வருவாயில் ஏ.ஐ. திட்டங்களின் பங்கு 10.5 சதவீதமாக உயா்ந்து, முந்தைய காலாண்டைவிட 29 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.

இக்காலாண்டில் நிறுவனப் பணியாளா்களின் எண்ணிக்கையில் நிகர அடிப்படையில் 4,000 போ் அதிகரித்துள்ள நிலையில், 8,000 புதிய பட்டதாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்; நடப்பு முழு நிதியாண்டிலும் சுமாா் 20,000 பேரை புதிதாகப் பணியில் அமா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அதேநேரம், சந்தைப் போட்டி மற்றும் விலைக் குறைப்பு அழுத்தங்கள் காரணமாக நடப்பு முழு நிதியாண்டுக்கான வருவாய் வளா்ச்சி மதிப்பீட்டை 1-2 சதவீதமாக இன்ஃபோசிஸ் குறைத்துள்ளது. முன்பு, இது 1.5 முதல் 3 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.