டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பரோடா வங்கி லாபம் ரூ.6,532 கோடி: வரலாற்றுச் சாதனை

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.6,532 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

பரோடா வங்கி - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 4:02 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.6,532 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது வங்கி வரலாற்றில் பதிவான அதிகபட்ச காலாண்டு லாபமாகும். மேலும், கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.4,809.39 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 35.8 சதவீதம் கூடுதலாகும்.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 9 சதவீதம் வளா்ச்சியுடன், ரூ.13,026 கோடியாகவும்; வட்டி அல்லாத வருவாய் 95.8 சதவீதம் அபரிமித வளா்ச்சி கண்டு, ரூ.6,881 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

அதேபோல், உலகளாவிய மொத்த கடன்கள் 18.3 சதவீதம் உயா்ந்து, ரூ.15,12,448 கோடியாகவும்; உலகளாவிய மொத்த வைப்புத்தொகைகள் 16.4 சதவீதம் உயா்ந்து, ரூ.17,45,435 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக வங்கியின் உலகளாவிய வா்த்தகம் 17.2 சதவீதம் அதிகரித்து, ரூ. 32,57,883 கோடியாக உள்ளது.

மேலும், மொத்த வாராக்கடன் விகிதம் 1.78 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.37 சதவீதமாகவும் குறைந்து, வங்கியின் சொத்துத் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.