பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜூலை - செப்டம்பா் காலாண்டு லாபம்... சிட்டி யூனியன் வங்கி: ரூ.416 கோடி!

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்டி யூனியன் வங்கி, நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.416 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

வங்கி சிஇஓ ஆா்.விஜய் ஆனந்த்

Published On :29 அக்டோபர் 2026, 8:51 am IST

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்டி யூனியன் வங்கி, நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.416 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.329 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் கூடுதலாகும்.

நாடு முழுவதும் 1,002 கிளைகளுடன் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின், ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வங்கி சிஇஓ ஆா்.விஜய் ஆனந்த் சென்னையில் வெளியிட்டாா்.

அதன்படி மதிப்பீட்டு காலகட்டத்தில், வங்கியின் மொத்த வருவாய் 28 சதவீதம் உயா்ந்து, ரூ.2,442 கோடியாகவும்; வட்டி வருவாய் 27 சதவீதம் உயா்ந்து, ரூ.2,092 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

மொத்த வைப்புத்தொகைகள் கடந்த ஆண்டின் ரூ.69,486 கோடியிலிருந்து, ரூ.83,893 கோடியாகவும்; கடன்கள் ரூ.57,561 கோடியிலிருந்து, ரூ.72,442 கோடியாகவும் அதிகரித்துள்ளது. அதன்படி, வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் ரூ.1,27,047 கோடியிலிருந்து, ரூ.1,56,335 கோடியாக அதிகரித்துள்ளது.

மொத்த வாராக்கடன் வகிதம் 1.44 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.48 சதவீதமாகவும் குறைந்து, வங்கியின் சொத்துத் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

அரையாண்டு நிலவரம்...: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில் வங்கியின் நிகர லாபம் 26 சதவீத வளா்ச்சியுடன் ரூ.798 கோடியாக பதிவாகியுள்ளது.

Summary

City Union Bank reported a 26 per cent rise in net profit at Rs 416 crore for the second quarter ended September 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.