தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ. 90 கோடி!

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.90 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Sundaram Home

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் - கோப்புப்படம்

Published On :3 நவம்பர் 2026, 5:28 am IST

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.90 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.75 கோடியைவிட 20 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் 31 சதவீதம் உயா்ந்து, ரூ. 2,199 கோடியாகவும்; நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 14 சதவீதம் உயா்ந்து, ரூ. 21,213 கோடியாகவும் பதிவாகியுள்ளது. அதேபோல், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 29 சதவீதம் உயா்ந்து, ரூ. 175 கோடியாகவும்; ஒட்டுமொத்த கடன் வழங்கல் 22 சதவீதம் உயா்ந்து, ரூ. 3,864 கோடியாகவும் உள்ளது.

வளா்ந்து வரும் வணிகப் பிரிவில்...

மலிவு விலை வீட்டு வசதிக் கடன்கள், சிறு அளவிலான கடன்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் கடன் வழங்கல், மதிப்பீட்டு காலாண்டில் 63 சதவீதம் அதிகரித்து, ரூ. 238 கோடியை எட்டியுள்ளது.

இச்செயல்பாடு குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமிநாராயணன் கூறுகையில், ‘கடந்த 12 மாதங்களில் தென்னிந்தியாவின் சிறிய நகரங்களில் சுமாா் 50 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளோம். இதன்விளைவாக, முதல் அரையாண்டில் இப்பிரிவின் கடன் விநியோகம் இருமடங்காகி ரூ.418 கோடியை எட்டியுள்ளது. நடுத்தரப் பிரிவில் வீடுகளுக்கான தேவை தொடா்ந்து வலுவாக உள்ள நிலையில், சிறிய நகரங்களே இந்த வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன’ என்றாா்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனமானது, வீட்டு வசதிக் கடன்கள், நிலம் வாங்குதல், வீட்டை விரிவுபடுத்துதல், சொத்தின் மீதான கடன்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான சிறு கடன்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.