மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோல் இந்தியா உற்பத்தி 19.3% அதிகரிப்பு!

கோல் இந்தியா அதன் நிலக்கரி உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.3% அதிகரித்து 67.2 மில்லியன் டன்னாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கோல் இந்தியா லிமிடெட்

Published On :1 நவம்பர் 2026, 6:04 pm IST

கொல்கத்தா: கோல் இந்தியா லிமிடெட், அக்டோபர் மாதம் அதன் நிலக்கரி உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.3% அதிகரித்து 67.2 மில்லியன் டன்னாக இருப்பதாக அறிவித்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் கோல் இந்தியா 56.4 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்திருந்தது.

அக்டோபர் மாதத்தில் நிலக்கரி கொள்முதல் 70.3 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு 59.2 மில்லியன் டன்னாக இருந்ததை விட இது 18.7% அதிகமாகும்.

நிதியாண்டின் 2வது காலாண்டில், கோல் இந்தியாவின் உற்பத்தி 0.7 சதவீதம் அதிகரித்து 388.2 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தி 385.5 மில்லியன் டன்னாக இருந்தது. துணை நிறுவனங்களான, மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் அக்டோபர் மாதம் 25.3 சதவீதம் அதிகரித்து 20.8 மில்லியன் டன்னாக அதன் அதிகபட்ச உற்பத்தியைப் பதிவு செய்தது. சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் 17.4 சதவீதம் அதிகரித்து, 14.3 மில்லியன் டன் உற்பத்தி செய்த நிலையில் வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் அதன் உற்பத்தி 64.7 சதவீதம் அதிகரித்து 5.9 மில்லியன் டன் உற்பத்தி செய்தது. ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் 27.9 சதவீதம் அதிகரித்து 4.6 மில்லியன் டன் உற்பத்தி செய்தது. அதே நேரத்தில் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் உற்பத்தி 26.1 சதவீதம் அதிகரித்து 7.3 மில்லியன் டன்னாக உயர்ந்தது. பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் 7.1 சதவீதம் அதிகரித்து 2.9 மில்லியன் டன் உற்பத்தி செய்த நிலையில் நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் மட்டும் சரிந்தது. அதன் உற்பத்தி 4.3 சதவீதம் குறைந்து 11.4 மில்லியன் டன்னாக உள்ளது.

கொள்முதல் பிரிவில், அக்டோபர் மாதம் வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் 50.2% அதிகரித்து 6.7 மில்லியன் டன்னாக இருந்தது. சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் கொள்முதல் 44.7 சதவீதம் அதிகரித்து 8.0 மில்லியன் டன்னாக இருந்தது. ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் கொள்முதல் 35.1 சதவீதம் அதிகரித்து 4.9 மில்லியன் டன்னாக இருந்தது. மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் 13.0 சதவீதம் அதிகரித்து 20.6 மில்லியன் டன்னாகவும், சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் 19.5 சதவீதம் அதிகரித்து 15.6 மில்லியன் டன்னாக இருந்தது. இதற்கிடையில், நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் கொள்முதல் 1.1 சதவீதம் சரிந்து 11.2 மில்லியன் டன்னாக சரிந்தது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலகட்டத்தில், நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் 14.6 சதவீதமும், மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் 4.2 சதவீதமும், பாரத் கோக்கிங் கோல் 9.8 சதவீதமும் உற்பத்தி சரிந்தது. வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ், சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் மற்றும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் உள்ளிட்டவை முறையே 15.9%, 21.1% மற்றும் 12.3% வளர்ச்சி கண்டது.

Summary

Coal India Ltd said its coal production rose 19.3 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.