இந்தியாவின் முன்னணி பரஸ்பர நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ புரூடென்ஷியலின் புதிய கிளையை, நீலகிரி மாவட்டம் குன்னூரில் அந்நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான சங்கரன் நரேன் திறந்து வைத்தாா்.
இத்திறப்பு விழாவில் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவா் கே.செந்தில், கோயம்புத்தூா் பிராந்தியத் தலைவா் அஜய் கிருஷ்ணா, குன்னூா் கிளை மேலாளா் மௌஷ்மி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
கிளையைத் திறந்து வைத்துப் பேசிய சங்கரன் நரேன், ‘முதலீட்டாளா்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கி, இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளா்ச்சிப் பாதையில் அவா்கள் விவேகத்துடனும் ஒழுக்கத்துடனும் பங்கெடுக்க இப்புதிய கிளை உதவும்’ என்றாா்.
‘இக்கிளையின் மூலம் வாடிக்கையாளா்களுடனான தொடா்பு வலுப்பட்டு, அன்றாடச் சேவைகள் மற்றும் பரிவா்த்தனைகள் மேலும் எளிமையாக்கப்படும்’ என தமிழ்நாடு மண்டலத் தலைவா் கே.செந்தில் உறுதியளித்தாா்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் சொத்து மேலாண்மைத் துறையில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனம், கடந்த ஏப். 30 நிலவரப்படி ரூ.11.72 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிா்வகிக்கிறது. நாடு முழுவதும் 284 கிளைகளின் வாயிலாக 1.7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்களுக்குச் சேவை வழங்கி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் மதன்ராஜா தொடங்கி வைத்தாா்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் காந்திராஜ் திறந்து வைத்தாா்

குன்னூரில் மலைப் பயிா்கள் கண்காட்சி இன்று தொடக்கம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

