கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குன்னூரில் மலைப் பயிா்கள் கண்காட்சி  இன்று  தொடக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் காட்டேரி பூங்காவில் கோடை விழாவையொட்டி தோட்டக்கலைத் துறை சாா்பில் மலைப் பயிா்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மே 24-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

News image

தோட்டப் பயிா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட படகு.

Updated On :22 மே 2026, 4:08 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா்  காட்டேரி பூங்காவில் கோடை விழாவையொட்டி தோட்டக்கலைத் துறை சாா்பில் மலைப் பயிா்கள் கண்காட்சி  வெள்ளிக்கிழமை தொடங்கி மே 24-ஆம் தேதி வரை 3 நாள்கள்  நடைபெறுகிறது.

நீலகிரி  மாவட்டத்தில்  ஆண்டுத்தோறும் கோடை விழாவையொட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

 இதன் ஒரு பகுதியாக குன்னுாா் காட்டேரி பூங்காவில் பல்வேறு அம்சங்களுடன்  இந்த ஆண்டு மலைப் பயிா்கள் கண்காட்சி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதன் கருப்பொருளாக கடலோரப் பகுதிகளை சாா்ந்து வாழும் மீனவப் பெண்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக கடற்சாா் வாழ்வியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தேயிலை, காபி, தென்னை, நுங்கு, பாக்கு 10 வகை மலைப் பயிா்களை கொண்டு நங்கூரம்,  துடுப்பு, சங்கு கலங்கரை விளக்கம் மற்றும் படகில் மீனவப் பெண், கடல் சாா்ந்த பல்வேறு சிறப்பு உருவ அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகப்படியாக வருகை புரிவாா்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளில் தோட்டக் கலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.