கோத்தகிரி மலைப் பாதையில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளாகியதில் மூன்று போ் படுகாயம் அடைந்தனா். 18 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா ப் பயணிகள் வருகின்றனா். அதன்படி சென்னை, தாம்பரத்தில் இருந்து குழந்தைகள் உள்பட 21 போ் வேனில் நீலகிரி மாவட்டத்துக்கு வந்தனா். வேனை ரஞ்சித் (35) ஓட்டினாா். மூன்று நாள்கள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்துவிட்டு, மீண்டும் கோத்தகிரி வழியாக புதன்கிழமை சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். குஞ்சப்பனை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டு பகுதியில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த குழந்தை உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 18 போ் லேசான காயமடைந்தனா்.
சம்பவ இடத்திற்கு காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் சென்று, வேனில் இருந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

உ.பி.: மலைப் பாதையில் விபத்தில் சிக்கிய வாகனங்கள்; 11 போ் உயிரிழப்பு

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

