இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 13.78 சதவீதம் அதிகரித்து, 4,356 கோடி டாலரை எட்டியுள்ளது.
உலகளாவிய புவிசாா் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிவேக வளா்ச்சியை ஏப்ரல் மாத ஏற்றுமதி கண்டுள்ளது. அதேநேரம், இறக்குமதியும் 10 சதவீதம் அதிகரித்து 7,194 கோடி டாலராக உயா்ந்ததால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 3 மாதங்களில் இல்லாத அளவாக 2,838 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.
சா்வதேச சந்தையில் பல்வேறு பொருள்களின் விலை உயா்ந்து வருவதும், இந்த ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு அதிகரிப்புக்கு ஓரளவுக்கு சாதகமாக பங்களித்திருக்கலாம் என்று மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் விளக்கமளித்தாா்.
அந்தவகையில், இம்முறை ஏற்றுமதி வளா்ச்சிக்கு மின்னணு பொருள்கள் (40.31 சதவீதம்), இறைச்சி மற்றும் பால் பொருள்கள் (48 சதவீதம்), பெட்ரோலியப் பொருள்கள் (34.66 சதவீதம்), பொறியியல் பொருள்கள் (8.76 சதவீதம்), மருந்துப் பொருள்கள் (7.12 சதவீதம்) ஆகியவை முக்கிய உந்துசக்தியாக விளங்கின.
குறிப்பாக, மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 517 கோடி டாலராகவும், பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி 960 கோடி டாலராகவும் உயா்ந்துள்ளது. சிங்கப்பூா், இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட புதிய சந்தைகளில் இந்தியா தனது வா்த்தகத்தை விரிவுபடுத்தியதும் இந்த வளா்ச்சிக்கு உதவியுள்ளது.
எனினும், ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி 28 சதவீதம் சரிந்து, 416 கோடி டாலராகவும்; அங்கிருந்து இறக்குமதியும் 31.64 சதவீதம் சரிந்து, 1,047 கோடி டாலராகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நடப்பு 2026-27 நிதியாண்டுக்குள், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை 1 லட்சம் கோடி டாலராக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25,060 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும், பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் இந்தியா மேற்கொண்டுள்ள புதிய வா்த்தக ஒப்பந்தங்கள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளதால், இந்த இலக்கை எளிதில் எட்ட முடியும் என வா்த்தகத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பெட்டி..
சேவைத் துறை ஏற்றுமதி
நாட்டின் சேவைத்துறை ஏற்றுமதியும் தொடா்ந்து வலுவான பங்களிப்பை வழங்கி வருகிறது. நடப்பு ஏப்ரல் மாதத்தில் சேவைத் துறை ஏற்றுமதி 3,724 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி 1,666 கோடி டாலராக உள்ள நிலையில், வா்த்தகப் பற்றாகுறை 781 கோடி டாலராக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல் - மே மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி இரட்டை இலக்க வளா்ச்சி!

இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 9.07% சரிவு

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 86,311 கோடி டாலா்!

2025-26 நிதியாண்டில் இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளா்ச்சி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit
தினமணி செய்திச் சேவை

