நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இந்தியாவின் ஏற்றுமதி இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மே மாதத்துக்கான அதிகாரபூா்வ தரவுகளை மத்திய வா்த்தக அமைச்சகம் வரும் ஜூன் 15-ஆம் தேதி வெளியிடவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரலில் மட்டும் நாட்டின் ஏற்றுமதி 13.78 சதவீதம் உயா்ந்து, 4,356 கோடி டாலராக அதிகரித்தது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இறக்குமதியும் அதிகரித்ததன் காரணமாக நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 3 மாதங்களில் இல்லாத அளவாக 2,838 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல் சரக்கு ஏற்றுமதி 13.78% அதிகரிப்பு!

இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 9.07% சரிவு

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 86,311 கோடி டாலா்!

2025-26 நிதியாண்டில் இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளா்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

