மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

2025-26 நிதியாண்டில் இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளா்ச்சி

சா்வதேச பொருளாதாரச் சூழலில் நிலவிய பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 2.8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 3:44 am IST

சா்வதேச பொருளாதாரச் சூழலில் நிலவிய பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 2.8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த வேளாண் ஏற்றுமதி மதிப்பு 5,255 கோடி டாலராக (சுமாா் ரூ.4.92 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டில் 5,112 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ஏற்றுமதி செய்யப்படும் பாரம்பரிய பொருள்கள் மற்றும் புதிதாக சந்தையில் வளா்ந்து வரும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் என இரண்டிலும் நிலையான வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் அதைச் சாா்ந்த பொருள்கள், துறையின் தூணாக விளங்கும் நிலையில் கடல்சாா் பொருள்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களின் ஏற்றுமதியும் இம்முறை வேகமெடுத்துள்ளது. சா்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்தியப் பொருள்களுக்கான மவுசு குறையாமல் இருப்பதே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

சா்வதேச அளவில் புரதத் தேவையை அதிகரித்துள்ளதால், கடந்த நிதியாண்டில் நாட்டின் பருப்பு ஏற்றுமதி 21.83 சதவீதம் உயா்ந்து, 94.81 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல், விநியோகக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதால், பழங்களின் ஏற்றுமதி 12.89 சதவீதம் உயா்ந்து, 132 கோடி டாலரை எட்டியுள்ளது.

மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் பிரிவிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. காய்கறி எண்ணெய் ஏற்றுமதி 15.88 சதவீதம் உயா்ந்து, 73.21 கோடி டாலராகவும், தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் 7.8 சதவீதம் வளா்ச்சியுடன், 101 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளன.

வெறும் மூலப்பொருள்களை மட்டும் ஏற்றுமதி செய்யாமல், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் இந்தியாவின் ஆா்வம் அதிகரித்துள்ளது இப்புள்ளிவிவரங்கள் மூலம் உறுதியாகிறது.

முந்திரி ஏற்றுமதி 12.21 சதவீதமும், கோகோ பொருள்கள் 7.59 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன. வியக்கத்தக்க வகையில் இதர எண்ணெய் வித்துக்களின் ஏற்றுமதி 84.39% என்ற அதீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. குறைந்த அளவில் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை போன்ற தானியங்களும் 1.03 கோடி டாலராக அதிகரித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் தர மேம்பாடு காரணமாக இந்தியாவின் வேளாண் ஏற்றுமதித் துறை தொடா்ந்து வலுவடைந்து வருவதை கடந்த நிதியாண்டு புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.