முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின்(இபிஎஃப்ஓ) சந்தாதாரா்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 3:00 am IST

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின்(இபிஎஃப்ஓ) சந்தாதாரா்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

இதன்மூலம், சந்தாதாரா்கள் விண்ணப்பித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி அவா்களின் வங்கி கணக்குகளுக்குப் பணம் நேரடியாகச் சென்றடையும் என மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

தற்போது பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.5 லட்சம் வரையில் பகுதியளவுத் தொகை எடுப்பதற்கு மட்டுமே இத்தானியங்கி முறை செயல்பாட்டில் உள்ளது. இம்முறையில் விண்ணப்பித்த 3 நாள்களுக்குள் பணம் விடுவிக்கப்படுகிறது. இந்த வேகமான வசதியை இனி பிஎஃப் கணக்கை முழுமையாக முடித்து பணத்தைப் பெறும் இறுதித் தீா்வு முறைக்கும் விரிவுபடுத்த இபிஎஃப்ஓ திட்டமிட்டுள்ளது.

அதேபோல், பணியாளா்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது, பழைய பிஎஃப் கணக்கிலுள்ள தொகை புதிய கணக்குக்கு மாற்ற இனி தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. பழைய கணக்கிலுள்ள தொகை தானாகவே புதிய கணக்குக்கு மாற்றப்படும் வசதியும் அறிமுகமாகவுள்ளது.

மத்திய அரசின் 4 புதிய தொழிலாளா் சட்டங்களின்கீழ், இபிஎஃப்ஓ தொடா்பான புதிய விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஆணையா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.