வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,137 புள்ளகள் சரிந்து 76,191 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3035 புள்ளிகள் சரிந்து 23,876 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
என்எஸ்இ தரவுகளின்படி, 614 பங்குகள் மட்டுமே உயர்வைச் சந்தித்த நிலையில் 2,290 பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. இது சந்தை நிலவரம் மிகவும் பலவீனமாக இருப்பதை உணர்த்துகிறது.
இன்றைய சரிவினால் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, முந்தைய வர்த்தக முடிவில் ரூ.4.73 டிரில்லியனாக இருந்த நிலையில், இன்று ரூ.4.67 டிரில்லியனாகக் குறைந்துள்ளது.
முன்னதாக ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை முற்றிலும் ஏற்க முடியாதது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்தார். இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன்காரணமாக ஆசிய சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
Summary
Sensex and Nifty remained under heavy selling pressure in late morning trade on Monday as weakness across banking, auto, realty and consumer durable stocks dragged the market lower.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!
பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள், நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் வீழ்ச்சி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


