கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை உயர்ந்து, செவ்வாய்க்கிழமை சரிந்து முடிந்த நிலையில் இன்று(ஏப். 29, புதன்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,245.83 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 812.41 உயர்ந்து 77,720.26 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 252.50
புள்ளிகள் உயர்ந்து 24,243.95 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.57 சதவீதம், 0.68 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
நிஃப்டி 50 குறியீட்டில் மாருதி சுசுகி இந்தியா, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, ஈச்சர் மோட்டார்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.
அதேபோல சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹெச்சிஎல் டெக், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து மற்ற அனைத்து பங்குகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ரியல் எஸ்டேட், ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான துறைகள் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் நிதி சேவைகள் குறியீடுகள் சரிந்து வருகின்றன.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 0.36% சதவீதம் உயர்ந்து 111.6 டாலராக உள்ளது.
Summary
Stock Market: Sensex gains 800 pts, Nifty above 24200
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 753, நிஃப்டி 211 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

