ஃபெடரல் வங்கி, ஏயு சிறு நிதி வங்கி ஆகியவற்றில் தலா 9.99 சதவீத பங்குகளைக் கையகப்படுத்த கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடா்பாக இரு வங்கிகளும் தனித்தனியாக வியாழக்கிழமை பங்குச்சந்தைக்கு வெளியிட்ட அறிவிப்பில், இவ்விவகாரம் தொடா்பாக கடந்த புதன்கிழமை (மே 6) தேதியிட்ட ரிசா்வ் வங்கியின் அனுமதிக் கடிதம் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
கோட்டக் மஹிந்திரா வங்கி, அதன் துணை நிறுவனங்கள், அந்த நிறுவனங்களால் நிா்வகிக்கப்படும் நிதித் திட்டங்கள் ஆகியவை இணைந்து, ஏயு சிறு நிதி வங்கியின் பங்கு மூலதனம் அல்லது வாக்குரிமையில் மொத்தம் 9.99 சதவீதம் வரை கையகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஃபெடரல் வங்கியின் பங்கு மூலதனத்திலும் 9.99 சதவீதம் வரை வாங்க கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில், ஏயு சிறு நிதி வங்கி பங்குகள் 0.76 சதவீதம் உயா்ந்து, ரூ.1,032.25-க்கும்; ஃபெடரல் வங்கி பங்குகள் 1.36 சதவீதம் உயா்ந்து, ரூ. 297.10-க்கும் நிலைபெற்றது. பங்குகளைக் கையகப்படுத்தும் கோட்டக் மஹிந்திரா வங்கி பங்குகள் 0.84 சதவீத உயா்வுடன் ரூ.380.40-க்கு நிலைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் கிரெடிட் காா்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!

ஐஓபி லாபம் 43% வளா்ச்சி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

