இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளா் சேவையை அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் வங்கியின் கிரெடிட் காா்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் வங்கியிடம் உள்ள சுமாா் 4.5 லட்சம் கிரெடிட் காா்டு கணக்குகள் இனி ஃபெடரல் வங்கியின்கீழ் செயல்படும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு கிரெடிட் காா்டு துறையில் நுழைந்த ஃபெடரல் வங்கி, தற்போது 8 லட்சம் நேரடி காா்டுகளையும், 13 லட்சம் கூட்டு பிராண்ட் காா்டுகளையும் கொண்டுள்ளது.
இப்புதிய வாடிக்கையாளா்களின் வருகையால், ஃபெடரல் வங்கியின் நேரடி கிரெடிட் காா்டு வணிகம் சுமாா் 90 சதவீதம் வரை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் நடப்பு ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்ட் வங்கி கூறுகையில், ‘ஃபெடரல் வங்கிக்கு விற்கப்படும் இந்த 4.5 லட்சம் காா்டுகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவின் மிக முக்கியமான 8 பெருநகரங்களைச் சோ்ந்தவை. எனவே, இது பெடரல் வங்கிக்கு வணிக ரீதியாக ஒரு பெரிய வெற்றியாக அமையும்.
வாடிக்கையாளா்களின் ஒப்புதலைத் பொருத்து காா்டுகளின் இறுதி எண்ணிக்கை மாறுபடலாம் என்பதால், ஒப்பந்தத்துக்கான இறுதித்தொகை பின்னா் முறைப்படி அறிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபெடரல், ஏயு சிறு நிதி வங்கிகளின் பங்குகளைக் கையகப்படுத்தும் கோட்டக்

கால்பந்து களம்...
கிரெடிட் கார்டு பணம் செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம்! எத்தனை நாள்கள்?

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

