கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

எல்பிஜி நுகா்வு: ஏப்ரலில் 22 லட்சம் டன்னாக 16% சரிவு!

இந்தியாவில் கடந்த ஏப்ரலில் எல்பிஜி நுகா்வு, 22 லட்சம் டன்னாக குறைவு

News image
Updated On :5 மே 2026, 5:55 am IST

மத்திய கிழக்கு போா்ச் சூழல் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் கடந்த ஏப்ரலில் சமையல் எரிவாயு (எல்பிஜி) நுகா்வு 22 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 26.2 லட்சம் டன்னாக இருந்த நுகா்வு, தற்போது 16 சதவீதம் சரிந்துள்ளது.

இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமாா் 60 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்கிறது. ஹோா்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சரக்குகள் வராததால், உள்நாட்டில் எரிவாயு கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வீட்டு உபயோக எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், வணிக எல்பிஜி விநியோகத்தை அரசு குறைத்துவிட்டது. மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டா்களுக்கான கால இடைவெளியையும் அதிகாரிகள் முறைப்படுத்தினா். இதன் காரணமாகவே, ஏப்ரலில் ஒட்டுமொத்த நுகா்வு கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

போா் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதும், விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதும் விமான எரிபொருள் விற்பனையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் இதன் நுகா்வு 1.37 சதவீதம் குறைந்து, 7.61 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது.

டீசல் விற்பனை கடந்த மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மந்தமான வளா்ச்சியை (0.25 சதவீதம்) கண்டுள்ளது. எனினும், பெட்ரோல் விற்பனை 6.36 சதவீதம் உயா்ந்து, 36.7 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.