ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

1 டாலர் - ரூ. 94.05! 29 காசுகள் சரிந்தது!

இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ. 94.05 என்ற புதிய வரலாற்றுச் சரிவு நிலையில் நிறைவடைந்தன.

News image

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:13 pm IST

மும்பை: அந்நிய நிறுவன முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதும் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் உள்ளிட்டவை, முதலீட்டாளர்களைத் தொடர்ந்து கவலையில் ஆழ்த்திய நிலையில், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ. 94.05 என்ற புதிய வரலாற்றுச் சரிவு நிலையில் நிறைவடைந்தன.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் நிலவிய வரும் சாதகமான சூழல் ஆகியவைற்றால் இந்திய ரூபாய்க்கு எவ்விதமான பலனளிக்கவில்லை என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணிச் சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 93.94 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூ. 93.86 முதல் ரூ. 94.08 என்ற நிலையில் வர்த்தகமாகி, இறுதியில் முந்தைய நாள் முடிவிலிருந்து 29 காசுகள் சரிந்து ரூ. 94.05 என்ற புதிய வரலாற்றுச் சரிவில் நிலைபெற்றது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ. 93.76 என்ற நிலையில் நிறைவடைந்தன.

Summary

The rupee slumped 29 paise to close at record low of 94.05 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.