மும்பை: கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் ஏற்றம் கண்டிருந்த இந்திய ரூபாய், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் மீண்டும் எழுந்த பதற்றத்தின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் (வெள்ளிக்கிழமை) 25 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூ. 94.47 என்ற நிலையில் நிறைவு பெற்றது.
ஹோா்முஸ் நீரிணை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியதன் மூலம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியது. அதேவேளையில், போர்நிறுத்தம் இன்னும் அமலில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இந்த முரண்பட்ட சூழலால் முதலீட்டாளர்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்பட்டதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்த நம்பிக்கைக்கு மத்தியில் பீப்பாய்க்கு ஒன்றுக்கு 98 டாலர் வரை சரிந்திருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகளை முதலீட்டாளர்கள் மறுபரிசீலனை செய்ததால், பீப்பாய்க்கு ஒன்றுக்கு சுமார் 100 டாலர் என்ற நிலைக்கு சென்றது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.58 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கிய பிறகு, தனது வலுவை இழந்து ரூ. 94.68 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 25 காசுகள் சரிந்து, ரூபாய் மதிப்பு ரூ. 94.47 என்ற நிலையில் வர்த்தகமானது.
Summary
The rupee depreciated 25 paise to close at 94.47 against the US dollar on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.57! 61 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.23! 39 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


