மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, மேற்கு ஆசிய அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதும் இந்திய ரூபாயின் மதிப்பை தொடர்ந்து 5வது நாளாக சரிவை சந்திக்க வைத்தது. வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ. 94.23 என்ற நிலையில் நிறைவுபெற்றது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் இயக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை நீடித்தது வரும் நிலையில், இது உலகளாவிய எரிபொருள் விலைகளை நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலால் உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் பெரும் விற்பனை அழுத்தம் ஏற்பட்டதுடன், வெளிநாட்டு முதலீடுகள் தொடரந்து வெளியேறுவதும் அதிகரித்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.25 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே வர்த்தகமான ரூபாய், அதிகபட்சமாக ரூ. 94.18 வரையிலும், பிறகு குறைந்தபட்சமாக ரூ. 94.31 வரையிலும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் வர்த்தக நிறைவு விலையிலிருந்து 22 காசுகள் சந்தித்து ரூ. 94.23 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நேற்றைய வர்த்தகத்தில் (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.94.01 என்ற நிலையில் இருந்தது. இது ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட தொடர்ச்சியான 4வது நாள் சரிவாகும்.
Summary
The rupee extended its losing streak for the fifth day in a row, depreciating 22 paise to close at 94.23 against the US dollar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.47! 25 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.23! 39 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94! 39 காசுகள் சரிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


