கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடா்ந்து, சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது வளா்ந்து வரும் வணிகப் பிரிவான மலிவு விலை வீட்டுக் கடன் மற்றும் மூலதனக் கடன் சேவைகளை புதுச்சேரியிலும் விரிவுபடுத்தியுள்ளது.
அண்மையில் 100 கிளைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள இப்பிரிவில், பாதிக்கும் மேற்பட்ட கிளைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில் முதல்கட்டமாக ரூ.10 கோடிக்கும் மேல் கடன் வழங்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.
இப்புதிய விரிவாக்கம் குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘புதுச்சேரி மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் சிறிய அளவிலான மலிவு விலை குடியிருப்புகள் அதிக அளவில் அமைந்துள்ளன.
மேலும், சிறந்த கல்வி மையமாகவும், வேலைவாய்ப்புகள் பெருகி வரும் நகரமாகவும் புதுச்சேரி திகழ்வதால், இது எங்களது மலிவு விலை வீட்டுக் கடன் பிரிவுக்கு ஒரு செழிப்பான சந்தையாக அமையும்’ என்றாா்.
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டில் முதல் 3 காலாண்டுகளில் (ஏப்ரல்-டிசம்பா்) ரூ.4,911 கோடிக்கு கடன்களை வழங்கி, ரூ.212 கோடி நிகர லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம்!

புதுச்சேரியில் எலுமிச்சம் பழம் விலை கடும் உயா்வு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தென் தமிழகத்தில் புதிய கிளைகள் தொடக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

