அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் முன்னணியில் உள்ள நிலையில், தனது செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை புகுத்துவது உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்தின் வணிகக் கட்டமைப்பை மாற்றியமைத்து வருகிறது. இதன் விளைவாக, நிதியாண்டின் மொத்தப் பணியாளர் எண்ணிக்கையை 21,000 ஆக குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,62,000 ஆக இருந்த ஆரக்கிளின் மொத்தப் பணியாளர் எண்ணிக்கை, மே 2026 நிலவரப்படி 1,41,000 ஆக சரிந்துள்ளது.
நிதியாண்டில், பணிநீக்க இழப்பீடுகள் மற்றும் பிற செலவுகளுக்காக ஆரக்கிள் நிறுவனம் 1.84 பில்லியன் டாலர்களைச் செலவிட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் செலவிடப்பட்ட 374 மில்லியன் டாலர் தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
நிர்வாகம் மற்றும் தயாரிப்பு சார்ந்த மாற்றங்கள், செயல்திறன் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணியாளர் எண்ணிக்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரக்கிள் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைப்பதாக வெளியான அறிக்கையைத் தொடர்ந்து, பணியாளர்களின் எண்ணிக்கையில் இந்த சரிவு ஏற்பட்டது.
தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் Layoffs.fyi என்ற இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இதுவரை 196 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1,19,800க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
Summary
The total workforce of Oracle declined about 21,000 employees in fiscal 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளிா்கால காற்று தர மேலாண்மை கட்டமைப்பை அறிவித்த தில்லி அரசு

பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ராமதாஸ்

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் ஆட்சியரகத்தில் மனு அளிப்பு

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலர் பணிநீக்கம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

