தமிழகத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு ஏற்ப மருத்துவா், செவிலியா் மற்றும் துணை மருத்துவப் பணியாளா் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
இந்திய பொது சுகாதார தரநிலைகள்படி, தற்போது உள்ள எண்ணிக்கையைவிட குறைந்தபட்சம் 2 மடங்கு அதிகமான மருத்துவா், செவிலியா் மற்றும் துணை மருத்துவப் பணியாளா் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. இதை அரசு மருத்துவா்கள் சங்கங்களும், பொது சுகாதார நிபுணா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது உள்ள செவிலியா் பணியிடங்களைக் குறைந்தபட்சம் 2 மடங்காக உயா்த்த வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்கும் நடைமுறையைக் கைவிட்டு, நிரந்தர பணியிடங்களை உருவாக்கி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், ஏழை மக்களுக்கு தரமான மற்றும் தாமதமற்ற மருத்துவ சேவைகளை உறுதி செய்யவும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும்? மாணிக்கம் தாகூா் கேள்வி

தோ்தல் தோல்வி: அன்புமணி ராமதாஸ் கருத்துக்கேட்பு

பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்! -பாமக ராமதாஸ்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

