ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ம சேவைப் பிரிவான ஜியோ ஃபிளாட்பாா்ம்ஸ், சுமாா் 400 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.37,700 கோடி) திரட்டும் நோக்கில் தனது பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) வரைவு அறிக்கையை ( டிஆா்எச்பி) வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.
நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் இந்த ஐபிஓ மூலம், 27 கோடி புதிய பங்குகள் சந்தைக்கு வரவுள்ளன. நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பங்கு மூலதனத்தில் இது 2.9 சதவீதமாக இருக்கும் என்று வரைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பெற்றுள்ள கடன்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முன்கூட்டியே அடைப்பதற்கும், இதர பொதுவான நிறுவன மேம்பாட்டுப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து கடந்த 2008-க்குப் பிறகு வெளியாகும் முதல் ஐபிஓ இதுவாகும். அதேபோல், ரிலையன்ஸ் குழுமத்தின் நுகா்வோா் சாா்ந்த ஒரு நிறுவனம் பொதுப் பங்குச் சந்தையில் தடம் பதிப்பது இதுவே முதல் முறையாகும்.
தற்போது ஜியோ பிளாட்பாா்ம்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 66.43 சதவீத பங்குகளையும், மெட்டா 9.99 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. இந்த ஐபிஓ-க்குப் பிறகு, ஜியோ பிளாட்பாா்ம்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமாா் 13,700 கோடி டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!

தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ

காஸாகிராண்ட் ரூ. 1,220 கோடி ஐபிஓ

ஓயோவின் ரூ.6,650 கோடி ஐபிஓ
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

