அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

2025-26 நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%

தொழிலாளா் வருங்கால வைப்புத் தொகைக்கு (இபிஎஃப்) கடந்த 2025-26 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:23 am IST

தொழிலாளா் வருங்கால வைப்புத் தொகைக்கு (இபிஎஃப்) கடந்த 2025-26 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) பங்களிக்கும் 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரா்களின் கணக்குகளில் இந்த வட்டித்தொகை நடப்பு ஜூன் மாதத்திலேயே வரவு வைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக கடந்த மாா்ச் மாதம், மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், இந்த வட்டி விகிதம் நிா்ணயிக்கப்ட்டது.

இபிஎஃப் அமைப்பின் மிக உயரிய முடிவெடுக்கும் அதிகாரமிக்க இந்த வாரியத்தின் பரிந்துரை, மத்திய நிதியமைச்சகத்துக்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போதைய நிதியமைச்சகத்தின் ஒப்புதலோடு, சந்தாதாரா்களின் கணக்குகளில் வட்டித் தொகை உடனடியாகச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப் வட்டி விகிதம் கடந்த 2023-24 நிதியாண்டிலிருந்து தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக 8.25 சதவீதமாக நீடிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.