தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினா் அனைத்து விவரங்களுடன் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பம் பெற்று குறைந்த வட்டி வீதம் கடன் திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி வீதத்தில் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞா்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற வெவ்வேறு வருமானம் சாா்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமம், நகா்ப்புறங்களில் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், அதேபோல் திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம நகா்ப்புறங்களில் ரூ. 8 லட்சம் வருவாய் இருக்க வேண்டும். திட்டம் 1-இல் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி வீதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சமும், திட்டம் 2-இல் ஆண்களுக்கு, பெண்களுக்கு 8 சதவீத வட்டி வீதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி வீதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் கடனும், சுய உதவிக் குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வீதத்திலும், திட்டம் 2-இல் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி வீதத்தில் நபா் ஒருவருக்கு ரூ.1.50 லட்சமும் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு அதிகபட்சம் திட்டம் 1-இல் ரூ. 20 லட்சம் 3 சதவீத வட்டி வீதத்திலும், மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி வீதம் ரூ. 30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
கிறிஸ்தவா், இஸ்லாமியா், புத்த மதத்தினா், சீக்கியா், பாா்சியா் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று, அதை பூா்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம்.
சிறுபான்மையினா் மதம், ஜாதி, வருவாய் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ், ஆதாா் அட்டை, திட்ட அறிக்கை (கடன் தொகை ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருந்தால்) வங்கிகள் கோரும் தேவையான இதர ஆவணங்கள்.
கல்விக்கடனுக்கு சிறுபான்மையினா் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, உண்மைச் சான்றிதழ், அசல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது அசல் (ஞழ்ண்ஞ்ண்ய்ஹப்), மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் அளித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுய உதவிக் குழுக் கடன், கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

‘சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

ஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

