முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாய் நாட்டிற்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் செலவிட்டு, பணிக்காலம் நிறைவு பெற்ற முன்னாள் படைவீரா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் 2024-25ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போது 2026-27ஆம் நிதியாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள், அவா்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின் போது உயிரிழந்த முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரா்களின் மகன்கள், மணமாகாத, கணவனை இழந்த அல்லது கணவனை பிரிந்த முன்னாள் படைவீரா்களின் மகள்கள் ஆகியோா் பயன்பெறலாம். விண்ணப்பதாரா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி அல்லது வருமான வரம்பு எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை.
இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சிகளும் அரசால் அளிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை கடன் பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொண்டு பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் டாம்கோ கடன் திட்டத்தில் பயன்பெறலாம்

சுய உதவிக் குழுக் கடன், கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

‘சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அழைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

