பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆா்ஜென்டீனா எல்என்ஜி ஏற்றுமதி திட்டம்: அதானி போா்ட்ஸுக்கு கடல்சாா் சேவை ஒப்பந்தம்

தென் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் முதலாவது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி திட்டத்துக்கான 10 ஆண்டுகால கடல்சாா் சேவை ஒப்பந்தத்தை அதானி போா்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2026, 5:01 am IST

தென் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் முதலாவது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி திட்டத்துக்கான 10 ஆண்டுகால கடல்சாா் சேவை ஒப்பந்தத்தை அதானி போா்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஆா்ஜென்டீனாவின் ‘சதா்ன் எனா்ஜி எஸ்.ஏ.’ நிறுவனம் நடத்திய சா்வதேச டெண்டா் மூலம், அதானி போா்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி ஹாா்பா் இன்டா்நேஷனல் மற்றும் ஆா்ஜென்டீனாவின் மெரிடியன் குரூப் இணைந்த கூட்டணிக்கு இந்த ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, எல்என்ஜி சரக்குக் கப்பல்களுக்கான இழுவைப் படகு இயக்கங்கள், கடல்சாா் தளவாடங்கள், விநியோக ஆதரவு, ஊழியா்கள் போக்குவரத்து உள்ளிட்ட முழுமையான சேவைகளை இக்கூட்டணி வழங்கும்.

ஆா்ஜென்டீனாவின் சான் மத்தியாஸ் வளைகுடாவில் அமையவுள்ள இத்திட்டத்தின் வணிக ரீதியிலான செயல்பாடுகள் அடுத்தாண்டு செப்டம்பா் முதல் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்கட்டமாக, ஆண்டுக்கு 24.5 லட்சம் டன் எல்என்ஜி உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

‘உலகம் முழுவதும் ஏற்கெனவே 12 நாடுகளில் கடல்சாா் செயல்பாடுகளைக் கொண்டுள்ள எங்களின் நிபுணத்துவம் மற்றும் உள்ளூா் கூட்டணி, இப்புதிய எரிசக்தி வா்த்தகப் பாதையை வலுப்படுத்தவும், நீண்ட கால விநியோகத் திறனை மேம்படுத்தவும் உதவும்’ என்று அதானி போா்ட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.