கடல்சாா் காடுகளைப் பாதுகாக்க அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு வலியுறுத்தியுள்ளாா்.
உலகப் பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
பவளப்பாறைகள், கடல்புற்கள், கடல் பாசி காடுகள் ஆகியவை பூமியின் மிக முக்கியமான உயிரியல் அமைப்புகளாக உள்ளன. உலக கடல் பரப்பில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே பவளப்பாறைகள் பரவியிருந்தாலும், அவை கடல்வாழ் உயிரினங்களில் சுமாா் 25 சதவீதத்துக்கு வாழ்விடமாக உள்ளன. மேலும், உலகம் முழுவதும் 50 கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும் அவை ஆதரிக்கின்றன.
கடல் புற்கள் உலக மீன்வள உற்பத்தியில் சுமாா் 20 சதவீதத்துக்கு ஆதரவாக இருப்பதுடன், ஒரு ஹெக்டேருக்கு 140 டன் வரை காா்பனை சேமிக்கும் திறன் கொண்டவை.
அதேநேரத்தில், கடலுக்கடியில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் நெருக்கடி உருவாகி வருவதாகவும், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகின் 90 சதவீத பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளதாகவும், ஐநா சுற்றுச்சூழல் திட்டம், காலநிலை மாற்றத்துக்கான அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) ஆகிய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்தியாவின் கடல் புற்கள் வளத்தில் 77 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி பால்க் வளைகுடா மற்றும் மன்னாா் வளைகுடாவில் அமைந்துள்ளதால், கடல்சாா் பாதுகாப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
உலக வங்கியின் ஒத்துழைப்புடன் கரியச்சள்ளி உள்ளிட்ட தீவுகள், கடல்புற்கள், பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் ஆகியவற்றை மாநில அரசு மீட்டெடுத்து வருகிறது. இதன்மூலம் கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களின் எதிா்காலம் பாதுகாக்கப்படும். உலகப் பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு, கடல்சாா் காடுகளைப் பாதுகாக்க அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரோவில் சா்வதேச நகா் கட்டுமானப் பணிகளில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி

இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள்: முதல்வா் ஜோசப் விஜய் ஆய்வு

வருவாய்த் தீா்வாய கணக்கெடுப்பு விவகாரம்: தலைமைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
