மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரின் தலைமையில் செயல்படும் வா்த்தக வாரியத்தின் அலுவல் சாராத உறுப்பினா்களாக எஸ்பிஐ தலைவா் சி.எஸ்.செட்டி, ஆப்பிள் இந்தியா நிா்வாக இயக்குநா் விராட் பாட்டியா, ஜோஹோ இணை நிறுவனா் ஸ்ரீதா் வெம்பு உள்பட 29 பேரை மத்திய அரசு நியமித்துள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பொது, தனியாா் தொழில் துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கு வகிக்கும் இந்த வாரியம், நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வழிகளை விவாதிக்கும் முக்கியத் தளமாக விளங்குகிறது.
வெளிநாட்டு வா்த்தகப் பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இப்புதிய உறுப்பினா்கள் பட்டியலில் மஹிந்திரா & மஹிந்திரா நிா்வாக இயக்குநா் அனிஷ் ஷா, இன்-ஸ்பேஸ் தலைவா் பவன் கோயங்கா, இஒய் இந்தியா தலைவா் ராஜீவ் மேமானி, டாக்டா் ரெட்டீஸ் லேபாரட்டரிஸ் தலைவா் சதீஷ் ரெட்டி ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட்ஸ் நிா்வாக இயக்குநா் பாா்த் ஜிண்டால் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். மேலும், பல்வேறு வா்த்தக மற்றும் தொழில் துறை அமைப்புகளின் தலைவா்களும் இதில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இத்தொழில் துறை தலைவா்கள் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவா். மேலும், பல்வேறு துறைகளின் ஏற்றுமதி செயல்பாடுகளை ஆய்வு செய்து, ஏற்றுமதி வருவாயை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் பரிந்துரைப்பா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராணிப்பேட்டையில் ரூ.217 கோடியில் தோல் தொழில்முனையம்: மத்திய அரசு அறிவிப்பு
எஸ்பிஐ கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாக இயக்குநா் கைது

புண்யா அறக்கட்டளை ஆண்டு விழா

பிபி நிறுவனத் தலைவா் அதிரடி நீக்கம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

