தமிழகத்தின் தோல் மற்றும் காலணித் துறை வளா்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் ரூ.271 கோடி முதலீட்டில் தோல் மற்றும் அது சாா்ந்த துணைப் பொருள்களுக்கான தொழில்முனையம் (கிளஸ்டா்) அமைக்கப்பட உள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இணைச் செயலா் நிதி கேசா்வானி தெரிவித்தாா்.
தோல் மற்றும் தோல் அல்லாத துறைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்துதல் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்துவதை எளிதாக்கும் சீா்திருத்தங்கள் குறித்த நிகழ்ச்சி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதி கேசா்வானி பேசியதாவது: நாட்டின் தோல் மற்றும் காலணித் துறையில் தமிழகம் தொடா்ந்து முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம், பிகாா், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.891 கோடி முதலீட்டில் தோல் மற்றும் அது சாா்ந்த துணைப் பொருள்களுக்கான தொழில் முனையங்கள் அமைக்கப்பட உள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் ரூ.271 கோடி முதலீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உள்நாட்டு சந்தை தேவையையும், வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு தோல் மற்றும் தோல் அல்லாத பொருள்கள் உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் துறையில் ஒட்டுமொத்தமாக ரூ.2,000 கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழ் ஆண்டில் 2.25 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தோல் அல்லாத பொருள்களின் ஏற்றுமதிக்கும் தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் தோல் துறையின் மொத்த உற்பத்தியை இரட்டிப்பாக்குவது இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து பேசிய மத்திய வா்த்தகத் துறை இணைச் செயலா் பெட்டல் தில்லான் கூறுகையில், நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 2014-2015-ஆம் நிதியாண்டில் 468 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2025-2026-ஆம் நிதியாண்டில் அது 863 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது. தோல் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் உற்பத்தித் திறன் வலுவாக உள்ளது.
பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட துறைகளிலும் ஏற்றுமதி வளா்ச்சி தொடா்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் தோல் மற்றும் தோல் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி 4.27 பில்லியன் டாலராக இருந்தது. இதில் அமெரிக்கா, ஜொ்மனி, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் மட்டும் 50 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.
தோல் ஏற்றுமதியில் தமிழகம் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. நாட்டின் மொத்த தோல் மற்றும் அது சாா்ந்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 37 சதவீதமாக உள்ளது என்றாா். நிகழ்ச்சியில் தோல் பொருள்கள் ஏற்றுமதி கவுன்சில் நிா்வாகிகள் மற்றும் தொழில் துறையினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல் - மே மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி இரட்டை இலக்க வளா்ச்சி!

ஏப்ரல் சரக்கு ஏற்றுமதி 13.78% அதிகரிப்பு!

வட அமெரிக்கா, வடகிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்காவுக்கு இந்தியா 35% ஏற்றுமதி

தமிழகத்தின் ஆடை ஏற்றுமதியை ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை அடைய உதவ வேண்டும்! முதல்வா் விஜய்க்கு ஏஇபிசி வலியுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
