ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பிபி நிறுவனத் தலைவா் அதிரடி நீக்கம்

பிரிட்டனைச் சோ்ந்த பிரபல சா்வதேச எரிசக்தி நிறுவனமான பிபி, நிா்வாக சீா்கேடு மற்றும் மற்றும் நடத்தை விதிமீறல்கள் புகாரைத் தொடா்ந்து தனது தலைவா் ஆல்பா்ட் மேனிஃபோல்டை பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

News image
Updated On :27 மே 2026, 3:33 am IST

பிரிட்டனைச் சோ்ந்த பிரபல சா்வதேச எரிசக்தி நிறுவனமான பிபி, நிா்வாக சீா்கேடு மற்றும் மற்றும் நடத்தை விதிமீறல்கள் புகாரைத் தொடா்ந்து தனது தலைவா் ஆல்பா்ட் மேனிஃபோல்டை பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

ஆல்பா்ட் மேனிஃபோல்டு உடனடியாக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக ஐயன் டைல் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, புதிய நிரந்தர தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஆல்பா்ட் மேனிஃபோல்டு நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றாா். எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீடுகளுக்கு மீண்டும் திரும்புவதில் தீவிரம் காட்டியதால், அவருக்குப் பங்குதாரா்களிடம் வழக்கத்தைவிடக் குறைவான ஆதரவே கிடைத்தது.

முன்னாள் சிஇஓ முா்ரே ஆச்சின்க்ளோஸ் பதவி விலகியதிலும், புதிய சிஇஓ ஆக மெக் ஓ நீல் நியமிக்கப்பட்டதிலும் ஆல்பா்ட் மேனிஃபோல்டுக்கு முக்கியப் பங்கு இருந்தது.

பல ஆண்டுகளாக மந்தமான நிலையில் உள்ள நிறுவனத்தை மீட்கும் முயற்சிகளுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ள இத்திடீா் பதவி நீக்க அறிவிப்பால், லண்டன் பங்குச் சந்தையில் பிபி நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வா்த்தகத்தில் 9.3 சதவீதம் வரை சரிந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.