மும்பை: நேற்றைய வர்த்தக அமர்வில் சரிவைக் கண்ட இந்தியப் பங்குச் சந்தை, இன்றைய வர்த்தகத்தில், வலுவாக மீண்டெழுந்தன. மேலும், நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறித்த வலுவான உத்வேகம் உள்ளிட்டவையால், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால், நிஃப்டி 50 குறியீடு வலுவாகத் தொடங்கி, வர்த்தக நேரத்தின் இடையே 24,334.70 என்ற உச்சத்தைத் எட்டியது.
அரசியல் பதற்றங்கள் தணியக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும், பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,095.6 புள்ளிகள் உயர்ந்து 77,982.51 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீடு 609.45 புள்ளிகள் உயர்ந்து 77,496.36 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 181.95 புள்ளிகள் உயர்ந்து 24,177.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஐடிசி, டெக் மஹிந்திரா, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இன்டர்குளோப் ஏவியேஷன், என்.டி.பி.சி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சந்தித்தன.
நிஃப்டி-யில் மாருதி சுசுகி இந்தியா, கோல் இந்தியா, டெக் மஹிந்திரா, ஐடிசி லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயரந்தும் மறுபுறம் இன்டர்குளோப் ஏவியேஷன், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவன பங்குகள் சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு சரிவுடன் நிறைவடைந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.65% உயர்ந்தன.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, 2026 நிதியாண்டில் ரூ. 14,679.5 கோடி என்ற சாதனை அளவிலான ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்தது. இது கடந்த ஆண்டை விட 1.24 சதவீதம் அதிகமாகும். ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பால் உந்தப்பட்டு 24.22 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து, நிறுவனம் தனது வரலாற்றிலேயே, மிகச்சிறந்த வருடாந்திர விற்பனை சாதனையைப் படைத்ததன் விளைவாக, மாருதியின் பங்குகள் 2.82 சதவீதம் உயர்ந்தன.
வலுவான முடிவுகள் மற்றும் சாதகமான கருத்துக்களால், எஃப்எம்சிஜி, ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் பங்குச் சந்தையை வழிநடத்தின. அதே வேளையில், பலவீனமான அறிகுறிகள், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், எதிர்பார்த்ததை விட சிறந்த வருவாய் ஆதரவுடன், முதலீட்டாளர்கள் இந்த சரிவைப் பயன்படுத்தி தங்கள் முதலீடுகளை அதிகரித்ததால், இந்தியப் பங்குச் சந்தைகள் சமீபத்திய சரிவிலிருந்து மீண்டன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,103.74 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 1,712.01 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகிய குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஜப்பானியப் பங்குச் சந்தைகள் விடுமுறை காரணமாக வர்த்தகம் நடைபெறவில்லை.
ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 2.85 சதவீதம் உயர்ந்து 114.4 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Equity benchmark indices Sensex and Nifty rebounded nearly 1 per cent on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த நம்பிக்கையால் சென்செக்ஸ் 941 புள்ளிகளும், நிஃப்டி 298 புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 356, நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


