நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டில் ரூ. 3,591 கோடி நிகர லாபம் ஈட்டியதாக இன்று தெரிவித்தது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ஈட்டிய ரூ. 3,857 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 7% சரிவாகும்.
2025-26 நிதியாண்டைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் நிகர லாபம் 1% உயர்ந்து ரூ. 14,454 கோடியாக இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்தது.
தில்லியைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம், செயல்பாட்டு வருவாய், 2025-26 நிதியாண்டின் 4வது காலாண்டில் 28% உயர்ந்து ரூ. 52,449 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ. 40,910 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
எனினும், மாருதி சுசுகியின் செயல்பாட்டுத் திறன் சீராகவே இருந்தது. அதன் செயல்பாட்டு லாபம் 27% உயர்ந்து ரூ. 6,157 கோடியை எட்டியபோதிலும், அதன் (EBITDA) லாப வரம்பு 10 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 11.74% ஆக சுருங்கியது.
2025-26 நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச விற்பனையை மாருதி சுசுகி பதிவு செய்தது. நிறுவனம் மொத்தம் 24,22,713 வாகனங்களை விற்பனை செய்ததாகத் தெரிவித்தது. இதில் உள்நாட்டு விற்பனை 19,74,939 வாகனங்களாகவும், ஏற்றுமதியானது 4,47,774 வாகனங்களாக அமைந்தது.
நிறுவனத்தின் 4வது காலாண்டில், வாகன விற்பனையானது 6,76,209 வாகனங்களாக இருந்ததது. இதுவே கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.8% அதிகமாகும். இதில் உள்நாட்டு விற்பனை 5,38,994 வாகனங்களாகவும், ஏற்றுமதி இதுவரை இல்லாத உச்சமாக 1,37,215 வாகனங்களாக பதிவானது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, பங்குக்கு ஒன்றுக்கு ரூ. 140 வீதம், இறுதி ஈவுத்தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவனத்தின் வருவாய் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்கு விலை 2.74% வரை சரிந்து, ரூ. 12,860 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது.
Summary
Maruti Suzuki, the country's largest car maker, said thar it earned a net profit of ₹3,591 crore in January-March quarter, marking a decline of 7%.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


