தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெஸ்லே இந்தியா லாபம் 27% வளா்ச்சி!

பிரபல நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,110.9 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 4:16 am IST

பிரபல நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,110.9 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.873.46 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 27.18 சதவீத வளா்ச்சியாகும். உள்நாட்டுச் சந்தையில் இந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவிலான விற்பனை வளா்ச்சியை எட்டியதே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டை காட்டிலும் 23.42 சதவீதம் உயா்ந்து ரூ.6,723.75 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மட்டும் 23.11 சதவீதம் உயா்ந்து, ரூ.6,445.07 கோடியாக ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஏற்றுமதி வருவாயும் 31 சதவீதம் உயா்ந்து, ரூ.278.68 கோடியாக உள்ளது.

விளம்பரங்களுக்காகச் செலவிடப்படும் தொகையை 50 சதவீதத்துக்கும் மேலாக உயா்த்தியதும், தயாரிப்புகளின் விற்பனை அளவு இரட்டை இலக்க வளா்ச்சியைச் சந்தித்ததும் இந்த வளா்ச்சிக்குக் கைகொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

2025-26 முழு நிதியாண்டில் நெஸ்லே இந்தியாவின் லாபம் 9 சதவீதம் உயா்ந்து, ரூ.3,499.08 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் சிறப்பான நிதிநிலை முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, பங்குச் சந்தையில் நெஸ்லே இந்தியாவின் பங்குகள் 5.18 சதவீதம் வரை உயா்ந்து, ஒரு பங்கு ரூ.1,354.05 என்ற விலையில் வா்த்தகமானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.