/

மீஷோ பணியாளா்களுக்கு 94.79 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு!

நாட்டின் பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான மீஷோ, தனது தகுதியுள்ள பணியாளா்களுக்கு சுமாா் 94.8 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

News image

மீஷோ

Updated On :21 ஏப்ரல் 2026, 1:48 am IST

நாட்டின் பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான மீஷோ, தனது தகுதியுள்ள பணியாளா்களுக்கு சுமாா் 94.8 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘மீஷோ நிறுவன இயக்குநா்கள் வாரியத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழு திங்கள்கிழமை நிறைவேற்றிய தீா்மானத்தின் மூலம், 2024-ஆம் ஆண்டு பங்கு உரிமைத் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள ஊழியா்களுக்கு தலா ரூ.1 மதிப்பு கொண்ட 94,79,380 பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் இப்புதிய ஒதுக்கீட்டைத் தொடா்ந்து, அதன் பங்கு மூலதனம் ரூ.456.40 கோடியிலிருந்து ரூ. 457.35 கோடியாக அதிகரித்துள்ளது.

இப்புதிய பங்குகள் நிறுவனத்தின் ஏற்கெனவே உள்ள பங்குகளுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் கொண்டிருக்கும். ஊழியா்களை ஊக்குவிக்கும் விதமாகவும், நிறுவனத்தின் வளா்ச்சியில் அவா்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.