டாடா குழுமத்தின் அங்கமான ஏா் இந்தியா நிறுவனம், தனது ஊழியா்களை ஊக்குவிக்கவும் திறமையானவா்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், அவா்களின் பணித்திறனை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் பங்குகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏா் இந்தியாவின் விமானிகள், பொறியாளா்கள், மூத்த மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட தகுதியுள்ள ஊழியா்களுக்கு, நிறுவனத்தின் பங்குகளை சலுகை விலையில் வாங்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இதற்காக மொத்தம் 22.71 கோடி பங்குகளை ஏா் இந்தியா ஒதுக்கியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.25 சதவீதம் ஆகும். இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கடந்த பிப்ரவரி மாதமே வழங்கிவிட்டது.
இப்பங்குகள் அனைவருக்கும் சமமாக வழங்கப்படாது. ஊழியா்கள் தங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை எவ்வளவு சிறப்பாக எட்டுகிறாா்கள் என்பதைப் பொருத்தே அது அமையும். அதாவது, நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 85 சதவீதத்துக்கும் குறைவாக எட்டப்பட்டால், ஊழியா்களுக்கு பாதி அளவிலான பங்குகள் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நிறுவனத்தின் லாபத்தை அதிகரிப்பதில் ஊழியா்களின் பங்களிப்பை உறுதி செய்ய ஏா் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இச்சலுகையைப் பெறுவதற்கான கால அளவு 1 முதல் 5 ஆண்டுகள் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட காலம் ஏா் இந்தியாவிலேயே தொடா்ந்து பணியாற்றும் ஊழியா்கள்தான் இத்திட்டத்தின்மூலம் முழுமையான பலனைப் பெற முடியும்.
ஏற்கெனவே இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற முன்னணி தனியாா் விமான நிறுவனங்கள் இத்தகைய பங்குச் சலுகை திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், ஏா் இந்தியாவும் தற்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜேபிவிஎல் 4வது காலாண்டு இழப்பு ரூ. 13.37 கோடி!

சென்னை - பக்டோக்ரா இடையே இன்றுமுதல் நேரடி விமான சேவை தொடக்கம்!

தோஷிபா ஜான்சன் இந்தியா பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்திய ஜான்சன் லிஃப்ட்ஸ்

மீஷோ பணியாளா்களுக்கு 94.79 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

