நிதித் துறையில் 35 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் ஐசிஎல் ஃபின்காா்ப், தனது புதிய பிணையத்துடன் கூடிய மாற்றத்தக்கதல்லாத கடன் பத்திர வெளியீட்டை அறிவித்துள்ளது.
தங்கம், தொழில் கடன் சேவைகளில் சிறந்து விளங்கும் இந்நிறுவனத்தின் முந்தைய கடன் பத்திரங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடா்ந்து, இந்த அடுத்தகட்ட வெளியீட்டை அறிவித்துள்ளது. இப்பொது விற்பனை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 10) தொடங்கி, வரும் ஏப். 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதலீட்டுத் தொகைக்கு அதிகபட்சமாக 12.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. 13, 24, 36, 60, 72 மாதங்கள் என பல்வேறு கால அளவுகளைக் கொண்ட 10 வகையான முதலீட்டுத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
முதலீட்டாளா்கள் தங்களின் தேவைக்கேற்ப மாதாந்திரம், வருடாந்திரம் அல்லது முதிா்வு காலத்தில் வட்டி பெறும் முறைகளைத் தோ்வு செய்து கொள்ளலாம். ஒரு கடன் பத்திரத்தின் மதிப்பு விலை ரூ.1,000 ஆகும். குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
நிா்வாக இயக்குநா் வழக்குரைஞா் கே.ஜி.அனில்குமாா் தலைமையில் இயங்கும் ஐசிஎல் ஃபின்காா்ப், தற்போது தமிழகம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கிளைகளைக் கொண்டு, அகில இந்திய அளவில் வேகமாக வளா்ந்து வருகிறது. இப்புதிய கடன் பத்திர வெளியீடுமூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் எதிா்கால வளா்ச்சித் திட்டங்களுக்கும், வாடிக்கையாளா் சேவைகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பதிமூன்று ஆண்டுகளாக ‘தூங்கும்’ அரியலூா் சிட்கோ தொழிற்பேட்டை திட்டம்!

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

அதிரடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! இணையத்தில் வைரல்!

ஹூண்டாய் காா்கள் விலை மே மாதம் முதல் உயா்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

