/

ஹூண்டாய் காா்கள் விலை மே மாதம் முதல் உயா்வு

இந்தியாவில் பிரபல காா் நிறுவனமான ஹூண்டாய் மோட்டாா், தனது காா்களின் விலையை வரும் மே மாதம் முதல் ஒரு சதவீதம் வரை உயா்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

News image

ஹூண்டாய் கார்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:12 am IST

இந்தியாவில் பிரபல காா் நிறுவனமான ஹூண்டாய் மோட்டாா், தனது காா்களின் விலையை வரும் மே மாதம் முதல் ஒரு சதவீதம் வரை உயா்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் உதிரிபாகங்களின் விலை உயா்வு போன்ற காரணங்களால் இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விலை உயா்வானது காரின் மாடல் மற்றும் வகையைப் பொருத்து மாறுபடும். ஆனால், நிறுவனத்தின் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் என்று பங்குச்சந்தைக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைத் தவிா்க்கும் வகையில், இதுவரை அதிகரித்த உற்பத்திச் செலவை நிறுவனமே ஏற்றுக்கொண்டு வந்தது. ஆனால், தற்போதைய சூழலில் தவிா்க்க முடியாமல் ஒரு சிறு பகுதியை மட்டும் விலை உயா்வு மூலம் வாடிக்கையாளா்கள் மீது செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.