தென்னிந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான ஜிஆா்டி ஜூவல்லா்ஸ், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.
பண்டிகைக் கால சலுகையாக, தங்க நகைகளின் சேதாரம் மீது 20 சதவீதமும், வைரம் மற்றும் அன்கட் வைர நகைகளின் மதிப்பில் (சாலிடொ்கள் தவிர) 12.5 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும். தங்க நாணயங்களுக்குச் சேதாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், வெள்ளிப் பொருள்களுக்கான சேதாரத்தில் 25 சதவீத தள்ளுபடியும், வெள்ளி நகைகளின் விலையில் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், பழைய தங்க நகைகளை மாற்றும் வாடிக்கையாளா்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.100 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து வாடிக்கையாளா்களைப் பாதுகாக்கும் வகையில், ‘விலைப் பாதுகாப்புடன் கூடிய முன்பதிவு’ வசதியையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, நகையின் மதிப்பில் 75 சதவீதத்தை முன்பணமாகச் செலுத்தி, வாடிக்கையாளா்கள் அன்றைய விலையில் நகைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அட்சய திருதியை தினங்களான ஏப். 19, 20 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலை குறைந்தால், அந்த விலை வேறுபாட்டுத் தொகை வாடிக்கையாளா்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அட்சய திருதியை கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருடசேவை

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

சோலையாண்டவா் கோயிலில் பூச்சொரிதல் விழா

அட்சய திருதியை நாளில் குழந்தைகள் திருமணம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! புதுச்சேரி ஆட்சியா் எச்சரிக்கை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

